Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை ஒப்புதல்

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை ஒப்புதல்

By: Nagaraj Fri, 17 June 2022 11:41:47 PM

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை ஒப்புதல்

லண்டன்: நாடுகடத்த ஒப்புதல்... விக்கிலீக்ஸ்' ஜூலியன் அசாஞ்சேவை, - அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே 'விக்கிலீக்ஸ்' என்ற இணையதள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். குறிப்பாக, அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதையடுத்து, அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரிட்டன் தலைநகர் லண்டனில், அசாஞ்சே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை, லண்டனில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தது.

official,notice,deportation,consent,interior ,அதிகாரப்பூர்வம், அறிவிப்பு, நாடு கடத்தல், ஒப்புதல், உள்துறை

கடந்த ஏப்ரல் மாதம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நடந்த இந்த வழக்கு விசாரணையில், அசாஞ்சேவை நாடு கடத்துவதற்கான ஒப்புதலைப் பெற, பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேலுக்கு, அதற்கான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று பிரிட்டன் உள்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோர்ட் உத்தரவுபடி அசாஞ்சேவை நாடு கடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுஇதற்கான அதிகாரப்பூரவ அறிவிப்பு உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது என்றார்.

Tags :
|