Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் ஜோபைடனை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

அமெரிக்க அதிபர் ஜோபைடனை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

By: Nagaraj Sat, 10 June 2023 8:41:24 PM

அமெரிக்க அதிபர் ஜோபைடனை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

வாஷிங்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவோம் என்று உறுதி அளித்துள்ளனர்.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தின. ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவும் போரை நிறுத்த உதவுவதாக உறுதியளித்தது.

அதன்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், போர் முடிவடையவில்லை. மாறாக இரு நாடுகளும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனுக்கு சொந்தமான காகோவ்கா அணை உடைந்து பல நகரங்களில் வெள்ளம் புகுந்தது.

commitment,joe-biden,meeting,rishi sunak,ukraine,war , உக்ரைன், உறுதி, சந்திப்பு, ஜோ பைடன், போர், ரிஷி சுனக்

மேலும், வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதிகாரப்பூர்வ பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அந்நாட்டு அதிபர் ஜோ பிடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமரான பிறகு ரிஷி சுனக் நடத்தும் 4வது சந்திப்பு இதுவாகும். சந்திப்பின் போது, இருவரும் உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக உறுதியளித்தனர். இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதில் இரு நாடுகளும் முக்கியப் பங்காற்றியுள்ளன.

அவர்கள் உக்ரேனிய இராணுவத்திற்கு போர் பயிற்சியும் அளித்தனர். தற்போது போரை முடிவுக்கு கொண்டு வர உதவுவதாக உறுதியளித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags :