Advertisement

பன், பேக்கரி பொருட்கள் விலை குறைக்க இயலாதாம்

By: Nagaraj Sun, 16 Oct 2022 10:29:36 PM

பன், பேக்கரி பொருட்கள் விலை குறைக்க இயலாதாம்

இலங்கை: இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பேக்கரி பொருட்கள் விலையை குறைக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

பன் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

tags: bakery,not reduced,price,sale ,குறைக்கப்பட மாட்டாது, பேக்கரி, விற்பனை, விலை

நாட்டிலுள்ள பேக்கரிகளுக்கான 50% கோதுமை மா விநியோகத்தை இரண்டு பிரதான நிறுவனங்கள் செய்வதாகவும் அவர்கள் விலையை 250 ரூபாயாக குறைத்தால் மாத்திரமே பாண் விலை குறையும் எனவும் அவர் கூறினார்.

குறித்த இரு நிறுவனங்களும் 280 முதல் 310 ரூபாய் வரை மாவை விற்பனை செய்வதாகவும் அவை விலையைக் குறைக்கும் என்பதை என்றும் அவர் நம்பமுடியாது. அதேவேளை , விலை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் சந்தையில் 350 ரூபாய்கே மா விற்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

Tags :
|