Advertisement

பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்ட புரெவி புயல்

By: Monisha Thu, 03 Dec 2020 10:21:15 AM

பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்ட புரெவி புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தற்போது பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் நவம்பர் மாதம் 28-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்றது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

burevi cyclone,bay of bengal,pamban,weather,heavy rain ,புரெவி புயல்,வங்கக்கடல்,பாம்பன்,வானிலை,கனமழை

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|