Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பு ..உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியிலில் டெல்லி

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பு ..உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியிலில் டெல்லி

By: vaithegi Mon, 13 Nov 2023 4:17:58 PM

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பு ..உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியிலில் டெல்லி

புது டெல்லி: தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பட்டாசுக்கு தனி இடம் உண்டு. பட்டாசு வெடிக்கப்படுவதால் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவது போல இந்தாண்டும் தேசியத் தலைநகர் காற்று மாசு அளவில் முதலிடம் பிடித்தது. ஸ்விஸ் குழுவின் காற்று தரக்குறியீட்டு அளவின் படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 420 ஆக, ஆபத்தானது என்ற நிலையிலிருந்தது. ஆனால் இம்முறை டெல்லியுடன், முதல் 10 இடங்களில் கொல்கத்தாவும், மும்பையும் இணைந்துள்ளன. கொல்கத்தா 196 என்ற காற்று தரக்குறியீட்டுடன் 4-வது இடத்திலும், இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை 163 என்ற காற்று தரக்குறியீட்டுடன் 8-வது இடத்திலும் இருக்கின்றன.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே டெல்லியில் அடர்த்தியான புகை மண்டலம் உண்டாகி காற்றின் தரம் 680 என்ற மிகவும் ஆபத்தான நிலை என்பதைக் கடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது டெல்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதித்தாலும் அத்தடை தீவிரத்துடன் அமல்படுத்தப்படுவதில்லை. இதனால் டெல்லியில் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து கொண்டே வருகிறது.

delhi,diwali,fireworks ,டெல்லி, தீபாவளி, பட்டாசு

இந்தியாவில் ஒவ்வொரு குளிர் காலத்துக்கு முன்பாகவும் காற்றின் தரம் மிகவும் மோசமடைகிறது. குளிர்ந்த காற்று, வாகனங்களின் புகை, தொழில்சாலைகள், கட்டுமானப் பணி தூசு மற்றும் வேளாண்மை கழிவுகளைகளை எரித்தல் போன்ற காரணிகளால் காற்று மாசு அடைகிறது.

இதற்கு இடையே டெல்லியில் கடந்த வாரத்தில் மிகவும் மோசம் என்ற நிலையில் நீடித்து வந்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சற்றே மேம்பட்டிருந்தது. இதனால் ஒற்றை - இரட்டை இலக்க திட்டத்தை அதிகாரிகள் ஒத்திவைத்தனர். தீபாவளிக்கு பிறகான காற்று மாசு அதிகரிப்பால் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு கொண்டு வருகின்றனர்.

Tags :
|
|