Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது ... அரசு போக்குவரத்து கழகம்

பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது ... அரசு போக்குவரத்து கழகம்

By: vaithegi Sat, 08 Oct 2022 7:47:42 PM

பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது  ...  அரசு போக்குவரத்து கழகம்

சென்னை: மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது ... தமிழக அரசு நகர பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலவச பேருந்து திட்டத்தில் பயணிக்கும் பெண்களை பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தகாத வார்த்தைகளால் பேசுவதாக புகார்கள் எழுந்தது.

மேலும் பேருந்து சரியான நேரத்திற்கு வரவில்லை என்றும் வந்தாலும் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை எனவும் குற்றம் சாட்டினர். இதனால் வயதானவர் மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர். இந்த புகார் குறித்து போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

government transport corporation,drivers,conductors ,அரசு போக்குவரத்து கழகம்,ஓட்டுநர், நடத்துனர்கள்

இதையடுத்து அப்போது பெண்களை அவமதிக்க கூடாது. அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பயணிக்கும் பெண்களுக்கு எவ்வித இடர்பாடும் ஏற்படா வண்ணம் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து தற்போது ஓட்டுநர், நடத்துனர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது என்று அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் தக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. '

மேலும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணி நீக்கம், சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :