Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இ-பாஸ் இல்லாமல் தமிழகம் - புதுச்சேரி இடையே பேருந்துகளில் பயணிக்கலாம்; முதல்வர் அறிவிப்பு

இ-பாஸ் இல்லாமல் தமிழகம் - புதுச்சேரி இடையே பேருந்துகளில் பயணிக்கலாம்; முதல்வர் அறிவிப்பு

By: Monisha Sat, 31 Oct 2020 4:04:12 PM

இ-பாஸ் இல்லாமல் தமிழகம் - புதுச்சேரி இடையே பேருந்துகளில் பயணிக்கலாம்; முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள தமிழக பகுதிகளில் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

e pass,tamil nadu,pondicherry,bus,government ,இ-பாஸ்,தமிழகம்,புதுச்சேரி,பேருந்து,அரசு

தமிழகம் - புதுச்சேரி இடையே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்ததையடுத்து தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்குகிறது. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மட்டுமே பேருந்து சேவை தொடங்கும்.

பிற மாநிலங்களுக்கு பேருந்து சேவையை தொடங்கும் திட்டம் இல்லை. புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் தமிழகம் - புதுச்சேரி இடையே பேருந்துகளில் பயணிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|