Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து துவங்கியது...பயணிகள் முககவசம் அணிந்து பயணம்!

தென் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து துவங்கியது...பயணிகள் முககவசம் அணிந்து பயணம்!

By: Monisha Wed, 02 Sept 2020 4:50:53 PM

தென் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து துவங்கியது...பயணிகள் முககவசம் அணிந்து பயணம்!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஸ் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பஸ் போக்குவரத்தும் நேற்று முதல் தொடங்கியது. ஆனால் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணி நடப்பதால், அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டதால், மாவட்ட எல்லைகள் அருகருகே அமைந்து விட்டன. இதனால் அந்தந்த சோதனை சாவடி வரை பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நெல்லையில் தூத்துக்குடி ரோட்டில் வசவப்பபுரம் சோதனை சாவடி வரை பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி செல்வோர் இந்த பஸ்சில் ஏறி, வசவப்பபுரம் வரை செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து மாற்று பஸ்சில் ஏறி தூத்துக்குடிக்கு செல்கிறார்கள். திருச்செந்தூர் செல்வோர் தூத்துக்குடி மாவட்ட பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். நாகர்கோவிலில் ஆரல்வாய்மொழி வரை பஸ்கள் இயக்கப்பட்டது. இதேபோல் பிற மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்கள் அந்தந்த சோதனை சாவடி மற்றும் குறிப்பிட்ட பகுதிக்கு வந்து நெல்லை மாவட்ட பஸ்களில் ஏறி பயணம் செய்தார்கள்.

bus transport,mask,travel,district boundary,public ,பஸ் போக்குவரத்து,முககவசம்,பயணம்,மாவட்ட எல்லை,பொதுமக்கள்

முதல் நாள் என்பதால் பஸ்களில் கூட்டம் மிகவும் குறைந்திருந்தது. தென்காசி, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு செல்வதற்கு பயணிகள் வந்தனர். அவர்களிடம் மாவட்ட எல்லை வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என்ற விவரத்தை அதிகாரிகள் எடுத்துக்கூறினர். அங்கிருந்து நடந்து சென்றுஅடுத்த மாவட்ட பஸ்களில் பயணம் செய்யுமாறு அனுப்பி வைத்தனர்.

பஸ்களில் நேற்று குறைவான பயணிகள், சமூக இடைவெளிவிட்டு பயணம் செய்தனர். ஆனால் ஒருசில பஸ்களில் கூடுதலாகவும், சில பஸ்களில் மிக குறைந்த பயணிகளும் பயணம் செய்தனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தலா 100 பஸ்கள் வீதம் 200 பஸ்களே இயக்கப்பட்டன. பஸ்சில் ஏறிய பயணிகள் முககவசம் அணிந்து பயணம் செய்தனர். இதனை டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் கண்காணித்தனர். முககவசம் இல்லாத பயணிகளை பஸ்சில் ஏற அனுமதிக்கவில்லை.

Tags :
|
|