Advertisement

ரொறன்ரோவில் சீரற்ற காலநிலை காரணமாக பஸ்கள் ரத்து

By: Nagaraj Wed, 18 Jan 2023 10:55:51 AM

ரொறன்ரோவில் சீரற்ற காலநிலை காரணமாக பஸ்கள் ரத்து

கனடா: ரொறன்ரோவில் சீரற்ற காலநிலை காரணமாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரொறன்ரோவின் பெரும்பாக பகுதியில் இவ்வாறு பஸ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனி மழை காரணமாக இவ்வாறு சேவைகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

school,bus services,cancellation,snow,suspension ,பாடசாலை, பஸ்சேவைகள், ரத்து, பனிமழை, இடைநிறுத்தம்

சீரற்ற காலநிலையினால் சில பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை, பாடசாலைகள் எதுவும் மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹால்டன் மாவட்ட பாடசாலை சபை, ஹால்டன் கத்தோலிக்க பாடசாலை சபை, பீல் மாவட்ட பாடசாலை சபை, டப்ரீன் பீல் கத்தோலிக்க பாடசாலை சபை, டர்ஹம் மாவட்ட பாடசாலை சபை, டர்ஹம் கத்தோலிக்க பாடசாலை சபை உள்ளிட்ட சில பகுதிகளுக்கான பாடசாலை பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|