Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 'நம்ம செஸ் , நம்ம பெருமை' .. செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் பொறிக்கபட்ட பேருந்துகள்..

'நம்ம செஸ் , நம்ம பெருமை' .. செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் பொறிக்கபட்ட பேருந்துகள்..

By: Monisha Fri, 01 July 2022 10:20:00 PM

'நம்ம செஸ் , நம்ம பெருமை' .. செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் பொறிக்கபட்ட பேருந்துகள்..

சென்னை: தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, காமராஜர் சாலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் , இலட்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசங்கள் பொறிக்கபட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாயிந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியானது ஜூலை 28 முதல் ஆகஸ்ட்10 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க்க உள்ளனர்.

chess,tamilnadu,chiefminister,proud ,தமிழ்நாடு ,முதல் அமைச்சர் ,மு.க. ஸ்டாலின்,செஸ் ஒலிம்பியாட்,

இதனை தெரிந்து கொள்ளும் வகையில் 5 மாநகர பேருந்துகளில், வெளி மாநிலங்களில் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் 10 பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் இலட்சினை மற்றும் சின்னத்துடன் 'நம்ம செஸ் , நம்ம பெருமை'- 'வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு' போன்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்ட விளம்பரப்படுத்தப் பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். இது தமிழ்நாட்டுக்கு பெருமை கிடைக்கும் என்று முதல் அமைச்சர் தெரிவித்தார்.

Tags :
|