Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாங்க... நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்... அழைக்கிறது சீனா

வாங்க... நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்... அழைக்கிறது சீனா

By: Nagaraj Wed, 04 Oct 2023 10:00:53 PM

வாங்க... நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்... அழைக்கிறது சீனா

பெய்ஜிங்: நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது. நிலவில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக 2028 ஆம் ஆண்டு சாங் இ-8 விண்கலத்தை ஏவ சீனா திட்டமிட்டுள்ளது.

இது சீனாவின் நான்காவது கட்ட சந்திர ஆய்வு ஆகும். இதன் மூலம் நிலவில் இதுவரை எடுக்கப்படாத இடத்தில் இருந்து மாதிரிகளை கொண்டுவந்து ஆய்வு உள்ளிட்டவற்றை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.

china,countries of the world,moon,research ,ஆராய்ச்சி, உலக நாடுகள், சீனா, நிலவு

இந்நிலையில், இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இதில் சேர விரும்பும் நாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களை அணுகலாம் என்று சீனா கூறியுள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் எந்த நாட்டுடன் இணைந்து செயல்படுவது என்பது பற்றி அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|