Advertisement

நேபாளத்தில் கொரோனாவால் முதல்பலி; சுகாதாரத்துறை தகவல்

By: Nagaraj Sun, 17 May 2020 6:48:55 PM

நேபாளத்தில் கொரோனாவால் முதல்பலி; சுகாதாரத்துறை தகவல்

முதல் உயிரிழப்பு... நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காத்மாண்டுவில் 29 வயதான பெண் மே 8 ஆம் தேதி பிரசவம் செய்து வீடு திரும்பியிருந்தார். இதனை தொடர்ந்து சில நாட்களில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

nepal,extension,government,coronavirus,first kills ,நேபாளம், நீட்டிப்பு, அரசு, கொரோனா வைரஸ், முதல் பலி

இந்நிலையில், கொரோனா சோதனை செய்யப்பட்டு இறுதியில் கொரோனாவால் உயிரிழந்ததாக உறுதிபடுத்தப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் அவரது கிராமத்திற்கு சீல் வைத்து, கடந்த சில நாட்களாக அவர் சந்தித்த நபர்கள், மற்றும் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேபாளத்தில் 281 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன. மார்ச் 24 அன்று ஊரடங்கு பல முறை நீட்டிக்கப்பட்டு இன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அரசு முடிவெடுக்க உள்ளது.

Tags :
|