Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இம்மாதம் இறுதிக்குள் நியாய விலைக்கடைகளிலும் கூகுள் பே மூலம் பணப்பரிமாற்றம் .. கூட்டுறவுத்துறை

இம்மாதம் இறுதிக்குள் நியாய விலைக்கடைகளிலும் கூகுள் பே மூலம் பணப்பரிமாற்றம் .. கூட்டுறவுத்துறை

By: vaithegi Wed, 10 May 2023 3:08:22 PM

இம்மாதம்  இறுதிக்குள் நியாய விலைக்கடைகளிலும் கூகுள் பே மூலம் பணப்பரிமாற்றம் ..  கூட்டுறவுத்துறை

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் ரேஷன் கடைகளில் ‘QR’ கோடு வசதி மூலம் இணையதள செயலி வாயிலாக பணம் செலுத்தும் வசதியை இந்த மாதம் இறுதிக்குள் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்து உள்ளது.

முதன் முறையாக தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ள 683 நியாய விலைக் கடைகளிலும் (QR Code) குறியீடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உ ள்ளது.

அதை தொடர்ந்து, கோயம்புத்தூர், புதுக்கோட்டை. சேலம், சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர், இராமநாதபுரம், திருநெல்வேலி. கன்னியாகுமரி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

google pay,co-op,fair price shop ,கூகுள் பே ,கூட்டுறவுத்துறை ,நியாய விலைக்கடை

மேலும் இந்த மாவட்டங்களை தொடர்ந்து இதை இதர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இன்னும் ஒருவாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

எனவே , அனைத்து மண்டலங்களிலும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் Paytm, Google Pay, PhonePay ஆகிய UPI வசதிகளை செய்து கொடுக்க கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளது.

Tags :
|