Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முட்டைக்கோஸ் விலை சரிவு... டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி

முட்டைக்கோஸ் விலை சரிவு... டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி

By: Nagaraj Mon, 22 May 2023 8:12:27 PM

முட்டைக்கோஸ் விலை சரிவு... டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி

தாளவாடி: முட்டைக்கோஸ் விலை சரிவு... ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோஸ் ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் பயிரிட 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

cabbage,farmers,agony,fall in price,sales ,முட்டைக்கோஸ், விவசாயிகள், வேதனை, விலை சரிவு, விற்பனை

முட்டைகோஸ் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளதோடு, அதனை வாங்குவதற்கு வியாபாரிகளும் வராததால் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்திருந்த முட்டைகோஸை டிராக்டர் ஓட்டி அழித்தார்.

கடந்த சில மாதங்களாகவே ஒன்று முதல் இரண்டு ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சில்லரை கடைகளில் கிலோ இருபது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :
|