Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

By: Nagaraj Wed, 14 Oct 2020 9:09:36 PM

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வேளாண், நகர்ப்புற, தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்காக நீர் பாதுகாப்பை அடைவதற்கு மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் தொடர்பான பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் (சி.ஜி.டபிள்யூ.பி), நீர்வளத் துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கா புத்துணர்ச்சி இயக்கம், இந்தியா மற்றும் அக்விஃபர் ரீசார்ஜ் மற்றும் நிலத்தடி நீர் பயன்பாட்டை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு இடையே 2019 அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் கிராம அளவிலான தலையீடு (மார்வி) பார்ட்னர்ஸ் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

australia,groundwater,memorandum of understanding,cabinet approval ,ஆஸ்திரேலியா, நிலத்தடி நீர், புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சரவை ஒப்புதல்

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அக்டோபர் 2019’இல் மத்திய நிலத்தடி நீர் வாரியம் (சி.ஜி.டபிள்யூ.பி), நீர்வளத் துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கா புத்துணர்ச்சி இயக்கம், இந்தியா மற்றும் அக்விஃபர்ரீசார்ஜ், நிலத்தடி நீரை நிர்வகித்தல் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிராம அளவிலான தலையீடு (மார்வி) பார்ட்னர்ஸ்ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.” என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

“வேளாண், நகர்ப்புற, தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்காக நீர் பாதுகாப்பை அடைய மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் தொடர்பான பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என்று அது மேலும் கூறியுள்ளது.

Tags :