Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடியிருப்பு பகுதியில் ஜாதி பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

குடியிருப்பு பகுதியில் ஜாதி பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

By: Nagaraj Thu, 03 Dec 2020 3:58:09 PM

குடியிருப்பு பகுதியில் ஜாதி பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சரவை ஒப்புதல்... மஹாராஷ்டிராவில் ஜாதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களின் சமூகத்தைக் கொண்டே குடியிருப்புப் பகுதிகளின் பெயர்கள் இருந்து வந்தன. ஜாதி அடிப்படையில் கொண்ட குடியிருப்பு பகுதிகளின் பெயரை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி அந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு தற்போது பீம் நகர், ஜோதி நகர் போன்ற புதிய பெயர்கள் சூட்டப்படவுள்ளன.

இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு ஜாதி பெயரை நீக்குவதற்கு மஹாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

maharashtra,castes,residential areas,cabinet ,மஹாராஷ்டிரா, ஜாதிகள், குடியிருப்பு பகுதிகள், அமைச்சரவை

இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல்வர் உத்தவ் தாக்கரே, கூறுகையில், ‛இந்த முடிவு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து ஜாதியினர் மத்தியிலும் தேசிய ஒற்றுமையை வளர்க்கும்,' என்றார்.

சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே தெரிவிக்கையில், ‛இந்த புரட்சிகரமான முடிவு மக்களின் பார்வையை மாற்றும்.

ஜாதி முறையை படிப்படியாக ஒழிக்க வேண்டும். மதிப்புடன் வாழ அனைவருக்கும் சம உரிமை உண்டு. ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் யார் மீதும் பாகுபாடு காட்டக் கூடாது,' என்றார்.

Tags :
|