Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழு கூட்டம்: பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதம்

பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழு கூட்டம்: பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதம்

By: Monisha Mon, 01 June 2020 2:31:01 PM

பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழு கூட்டம்: பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தியுள்ளன.

ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளன.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் பாதிப்புக்கு ஏற்றவாறு பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

india,corona virus,cabinet committee meeting,prime minister modi,economic recovery plans ,இந்தியா,கொரோனா வைரஸ்,அமைச்சரவை குழு கூட்டம்,பிரதமர் மோடி,பொருளாதார மீட்பு திட்டங்கள்

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த பின்னர் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரண நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கான நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|