Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்-அமைச்சர் தலைமையில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக வரும் 30-ந்தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்

முதல்-அமைச்சர் தலைமையில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக வரும் 30-ந்தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்

By: vaithegi Wed, 24 Aug 2022 12:40:34 PM

முதல்-அமைச்சர் தலைமையில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக வரும் 30-ந்தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ரம்மி, சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் பணத்தை இழந்து இளைஞர்கள் பெரும்பாலோனோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் அரங்கேறியுள்ளன.

எனவே இதை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து கொண்டு வருகின்றனர் இதனையடுத்து ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக, தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது.

online rummy,chief secretariat,cabinet meeting ,ஆன்லைன் ரம்மி,தலைமைச் செயலகம்,அமைச்சரவைக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கொண்டு வருவது, புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவைகள் பற்றி விவாதிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், துறை வாரியான அமைச்சர்களின் செயல்பாடுகள், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்

Tags :