Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

By: vaithegi Tue, 31 Oct 2023 09:59:17 AM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்


சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வசம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் பற்றியும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றியும்,இதில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் அத்துடன் பெரும் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்க ஒப்புதல் அளிப்பது மேல்முறையீடு செய்து உள்ளோரில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமை தகுதி வழங்குவது உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

cabinet meeting,chief minister m.k.stalin ,அமைச்சரவை கூட்டம் ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டமன்ற சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெவு ள்ளது.

மேலும் அத்துடன் காவிரியில் கர்நாடக அரசு போதிய தண்ணீரை திறந்து விடாமலிருந்து வருகிறது இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :