அமைச்சரவையில் ஜனவரி மாதம் மாற்றம்: பசில் ராஜபக்ஷவுக்கு பதவி?
By: Nagaraj Sun, 22 Nov 2020 6:36:26 PM
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றன.
20A திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி எந்த அமைச்சையும் தக்கவைத்துக் கொள்ள அனுமதிப்பதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்க எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு மற்றும், தொழில்நுட்ப அமைச்சை தன்வசம் வைத்திருப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பத்திற்கு பொறுப்பான அமைச்சராக, தகவல்
தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான அனைத்து விடயங்களையும் தனது எல்லைக்குள்
கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, அடுத்த
ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவார்
என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரும் அமைச்சரவையில்
இடம்பெறுவார். அடுத்த வாரமே நாடாளுமன்றத்திற்குள் நுழைய பசில் விரும்புவதாக
தெரிவிக்கப்படுகிறது.