Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேபிள் பாலம் இடிந்து விபத்து... மீட்புப்பணிகள் விரைவுப்படுத்தி நடவடிக்கை

கேபிள் பாலம் இடிந்து விபத்து... மீட்புப்பணிகள் விரைவுப்படுத்தி நடவடிக்கை

By: Nagaraj Mon, 31 Oct 2022 6:44:17 PM

கேபிள் பாலம் இடிந்து விபத்து... மீட்புப்பணிகள் விரைவுப்படுத்தி நடவடிக்கை

குஜராத்: குஜராத்தின் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். மீட்புப்பணிகள் விரைந்து முடுக்கி விடப்பட்டுள்ளது.
மச்சு என்ற ஆற்றின் மீது கட்டப்பட்ட அந்த பாலத்தை புதுப்பிக்கும் பணி அண்மையில் நடந்து முடிந்த நிலையில், 5 நாட்களுக்கு முன் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

rescue work,fastram,state government,prime minister modi,gujarat ,மீட்புப்பணி, துரிதம், மாநில அரசு, பிரதமர் மோடி, குஜராத்

இந்நிலையில், ஞாயிறன்று மாலையில் அப்பாலத்தின் மீது 150க்கும் மேற்பட்டோர் சென்றபோது, திடீரென இடிந்து விழுந்தது. பலர் இடிபாடுகளில் சிக்கியதுடன், ஆற்று நீரிலும் தத்தளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், 60க்கும் மேற்பட்டோரை சடலங்களாக கண்டெடுத்ததாக கூறப்படும் நிலையில், மேலும் பலரை மீட்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி மாநில அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Tags :