Advertisement

8 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய கலிபோர்னியா அரசு முடிவு

By: Nagaraj Sun, 12 July 2020 12:18:34 PM

8 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய கலிபோர்னியா அரசு முடிவு

8 ஆயிரம் கைதிகள் விரைவில் விடுதலை... கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து 8,000க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக கலிபோர்னியா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கலிபோர்னியா சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கலிபோர்னியாவில் 8,000க்கும் அதிகமான சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான தகுதியுடன் உள்ளனர். கொரோனா நெருக்கடி காலத்தில் முன்னர் எடுத்த நடவடிக்கைகளின்படியே இதுவும் எடுக்கப்படவுள்ளது.

florida,texas,arizona,california,prisoners ,புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா, கைதிகள்

சிறையில் அடைபட்டுள்ள நபர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயோர்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
|