Advertisement

பிளாஸ்மா தானம் செய்ய இந்தியர்களுக்கு அழைப்பு

By: Nagaraj Sat, 22 Aug 2020 12:04:07 PM

பிளாஸ்மா தானம் செய்ய இந்தியர்களுக்கு அழைப்பு

பிளாஸ்மா தானம் செய்ய அழைப்பு... கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்வதற்கு இந்தியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் முன்வரவேண்டும் என இங்கிலாந்து அவசர அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை 205க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினம், தினம் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

plasma donation,uk,india,south asia,call ,பிளாஸ்மா தானம், இங்கிலாந்து, இந்தியா, தெற்காசியா, அழைப்பு

இந்நிலையில் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சைகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய இங்கிலாந்தின் தேசிய சுகாதார திட்டத்தின் அதிகாரி ரேகா ஆனந்த், வெள்ளை இனத்தவர்களை ஒப்பிடும் போது தெற்காசிய மக்களுக்கு இரு மடங்கு ஆன்ட்டி பாடிகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய இந்த ஆன்டிபாடி நிறைந்த பிளாஸ்மா ஆசிய சமூக மக்களிடம் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிளாஸ்மாவை நன்கொடை அளிப்பதன் மூலம் ஒரு உயிர் காப்பாற்ற முடியும் என்று கூறினார்.

Tags :
|
|