புதிய கூட்டணியில் இணைந்துகொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு
By: Nagaraj Sat, 19 Sept 2020 5:39:42 PM
ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு... புதிய கூட்டணியில் இணைந்துகொள்ளவும் மாகாண சபை தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
ஊடக சந்திப்பு ஒன்றில் இந்த அழைப்பினை விடுத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த செய்தி ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார்.
“ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கின்றோம். இரு கட்சிகளும் ஒரு கூட்டணியின் பங்காளிகளாக மாறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டால் இரு கட்சிகளும் மாகாண சபை தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடியும்.
இந்த விடயம் தொடர்பாக நான் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித்
தலைவர் ருவான் விஜயவர்த்தனவிடமும் பேசியுள்ளேன் என அவர் கூறினார்.
இதேவேளை
குறித்த ந்திப்பில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைப்பதே சிறந்தது என
கூறினார்.
அத்தோடு சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக
மாறினால், புதிய முன்மொழியப்பட்ட கூட்டணிக்கு ஒரு தலைமைக் குழு இருக்க
முடியும் என கூறினார்.