Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகை முடிந்து திரும்புபவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை முடிந்து திரும்புபவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: Nagaraj Mon, 13 Nov 2023 9:26:41 PM

தீபாவளி பண்டிகை முடிந்து திரும்புபவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து மக்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழக அரசு தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு வசதியாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கி கொண்டு வருகிறது. நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பேருந்து மற்றும் ரயில் முன்பதிவுகள் 3 மாதங்களுக்கு முன்பிருந்து தொடங்கியது.

festival,bus,vacation,public,travel,returned ,பண்டிகை ,பேருந்து, விடுமுறை, பொதுமக்கள், பயணம், திரும்பினர்

தமிழக அரசு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஆன ஞாயிற்றுக்கிழமை வந்த காரணத்தினால் நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமையும் பொதுமக்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு வசதியாக விடுமுறையை அறிவித்தது.

இதையடுத்து நேற்று தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பெரும்பாலான மக்கள் மாலை நேரங்களிலிருந்து மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னைக்கு மட்டும் வழக்கமான பேருந்துகள் 2,100-ம் சிறப்பு பேருந்துகள் 3,160 இயக்கப்படுகிறது.

இதே போல் மற்ற மாவட்டங்களுக்கு இடையே 3825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|
|
|