Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓ.பி.எஸ்.-ஐ அழைத்து பொதுக்குழுவை கூட்டினால்தான் முழு வெற்றி

ஓ.பி.எஸ்.-ஐ அழைத்து பொதுக்குழுவை கூட்டினால்தான் முழு வெற்றி

By: Nagaraj Sat, 04 Feb 2023 6:48:27 PM

ஓ.பி.எஸ்.-ஐ அழைத்து பொதுக்குழுவை கூட்டினால்தான் முழு வெற்றி

திருமங்கலம்: ஓ,பி.எஸ். ஆதரவாளர் திட்டவட்டம்... உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னத்தை பெற ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே அவரை அழைத்து பொதுக்குழுவை கூட்டினால் தான் முழு வெற்றி கிடைக்கும் என ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக பொது குழுவை கூட்டி தேர்வு செய்யப்படும் வேட்பாளரே போட்டியிட முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக கூறி திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணி தேவர் சிலை அருகில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான அய்யப்பன் தலைமையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ அய்யப்பன், “தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு ஓபிஎஸ் வெற்றிக்கான தீர்ப்பு. தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ayyappan,general committee,mla,ops, ,அய்யப்பன், எம்எல்ஏ, ஓபிஎஸ்., பொதுக்குழு

பொதுக்குழுவை கூட்டி வேட்பாளர் தேர்வை ஓபிஎஸ் தலைமையில் நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறோம் என கூறினார்.

பொதுக்குழுவை கூட்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவின்படி, தங்களுக்கே அதிகம் பேர் ஆதரவு உள்ளதாகவும், தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்தான் தேர்வு செய்யப்படுவார் என இபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எம்எல்ஏ அய்யப்பன், “பொதுக்குழுவைக் கூட்டி ஓபிஎஸ் கருத்தைக் கேட்டு அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது

அதுவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. இரட்டை இலை சின்னம் கோரி கையெழுத்திட ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே ஓபிஎஸ்சை அழைத்து பொதுக்குழுவை கூட்டினால் மட்டுமே முழு வெற்றி கிடைக்கும் என்பதால் அந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.” என தெரிவித்தார்.

Tags :
|
|