Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3 ஆண்டுகள் வரை விசாவுக்காக காத்திருக்கணுமாம்... எதற்கு தெரியுங்களா?

3 ஆண்டுகள் வரை விசாவுக்காக காத்திருக்கணுமாம்... எதற்கு தெரியுங்களா?

By: Nagaraj Wed, 23 Nov 2022 3:36:15 PM

3 ஆண்டுகள் வரை விசாவுக்காக காத்திருக்கணுமாம்... எதற்கு தெரியுங்களா?

அமெரிக்கா: அமெரிக்கா செல்பவர்கள் மூன்று ஆண்டுகள் வரை விசாவுக்காக காத்திருக்க நேரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் முறை அமெரிக்கா செல்வோருக்கு யு.எஸ். பிஸினஸ் பி 1 மற்றும் சுற்றுலா பி 2 வகை விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான காத்திருப்பு காலம் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

america,visa,duration,3 years,waiting,info ,
அமெரிக்கா, விசா, காலம், 3 ஆண்டுகள், காத்திருப்பு, தகவல்

கோவிட்டுக்குப் பின்னர் அமெரிக்கா செல்ல விரும்புவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க புள்ளி விவரத்தின் படி மும்பையில் 999 நாட்களும் டெல்லியில் 961 நாட்களும் சென்னையில் 904 நாட்களும் விசாவுக்கான காத்திருப்பு காலமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு முதல் முறை செல்பவர்கள் விசாவுக்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று தகவல் அங்கு செல்ல நினைப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|