Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா உற்பத்தி, இறக்குமதிக்கு தடை

கனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா உற்பத்தி, இறக்குமதிக்கு தடை

By: Nagaraj Thu, 22 Dec 2022 10:14:24 AM

கனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா உற்பத்தி, இறக்குமதிக்கு தடை

கனடா: பிளாஸ்டிக் ஸ்ட்ரா உற்பத்திக்கு தடை... கனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா மற்றும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மளிகைப் பைகள், ஸ்ட்ரா வகைகள் உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒராண்டு காலத்தில் இந்த பிளாஸ்டிக் உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட உள்ளது.

first,the ban,canadians,plastic,use ,ஒருதடவை, தடை விதிப்பு, கனேடியர்கள், பிளாஸ்டிக், பயன்பாடு

பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுக்கும் நோக்கில் இவ்வாறு கனடாவில் கட்டம் கட்டமாக தடை உத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது.

ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளை தடை செய்வதன் மூலம் மீள் சுழற்சி செய்ய முடியாத 1.3 மில்லியன் தொன் எடையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்க முடியும் என சுற்றாடல் ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

தேசிய ரீதியாக தடை விதிக்கப்படும் நிலையில், பொதுவாக கனேடியர்கள் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுத்துக் கொண்டுள்ளனர்.

Tags :
|