Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த கனடா

சீன சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த கனடா

By: Nagaraj Mon, 02 Jan 2023 11:02:31 PM

சீன சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த கனடா

கனடா: சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் விமானப் பயணத்துக்கு முன்னதாக கொவிட் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என கனடாவும், ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளன.

சீனா, ஹாங்கொங்கில் இருந்து வரும் பயணிகள் தங்கள் பயணத்துக்கு இரு நாள்கள் முன்னதாக கொவிட் பரிசோதனை செய்து ‘நெகடிவ்’ சான்றிதழுடன் வர வேண்டும். இந்த நடைமுறை ஜனவரி 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அவுஸ்ரேலியா அறிவித்தது.

spain,france,south korea and israel ,ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா மற்றும் இஸ்ரேல்

கனடாவும் இதேபோன்ற நடைமுறை ஜனவரி 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது. கடந்த 2020ஆம் மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் தனது எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்கும் என சீனா அறிவித்துள்ள நிலையில், பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அதே நேரத்தில், அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள், ஏற்கனவே புதிய சோதனை விதிகளை அறிவித்தன.

Tags :
|
|