Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போர் தாக்குதலில் இருந்து தப்பி வந்த உக்ரைன் மக்களை வரவேற்ற கனடா பாதுகாப்பு அமைச்சர்

போர் தாக்குதலில் இருந்து தப்பி வந்த உக்ரைன் மக்களை வரவேற்ற கனடா பாதுகாப்பு அமைச்சர்

By: Nagaraj Sun, 03 July 2022 4:28:15 PM

போர் தாக்குதலில் இருந்து தப்பி வந்த உக்ரைன் மக்களை வரவேற்ற கனடா பாதுகாப்பு அமைச்சர்

உக்ரைன்: உக்ரைனியர்களுக்கு வரவேற்பு... உக்ரைனில் போர் தாக்குதலில் இருந்து தப்பி கனடாவிற்கு வந்த மக்களை தமிழ்ப்பெண்ணான நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வரவேற்றுள்ளார்.

ரஷ்ய படையினர் கடந்த 4 மாதங்களாக உக்ரைமீது தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் மக்கள் பலர் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.அந்த வகையில் உக்ரைனை சேர்ந்த மக்கள் ஒரு குழுவாக கனடாவிற்கு வந்த நிலையில் அவர்களை நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வரவேற்றுள்ளார்.

ukraine,people,welcome,canada,department of defense,minister,families ,உக்ரைன், மக்கள், வரவேற்பு, கனடா, பாதுகாப்பு துறை, அமைச்சர், குடும்பங்கள்

இது குறித்து அவரின் டுவிட்டர் பதிவில், ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடரும் கடந்த நான்கு மாதங்களாக கனடா உக்ரைனுடன் தோளோடு தோள் நிற்கிறது. இன்று நான் உக்ரேனிய குடும்பங்களைச் சந்தித்தேன், அவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் ஓக்வில்லில் குடியேறினர்.

அவர்கள் அழகான கலைப்படைப்புகளையும் பாடல்களையும் தயார் செய்து, தங்களின் நம்பமுடியாத கதைகளை பகிர்ந்து கொண்டனர் என கூறிய அவர், எங்கள் உக்ரைனிய நண்பர்களை அன்புடன் வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Tags :
|
|