Advertisement

இந்திய இளம் பெண்ணுக்கு கிடைத்த கனேடிய உதவித் தொகை

By: Nagaraj Tue, 05 July 2022 11:21:32 PM

இந்திய இளம் பெண்ணுக்கு கிடைத்த கனேடிய உதவித் தொகை

கனடா: உதவித் தொகை வென்ற இளம் பெண்... அமீரகத்தில் வசித்து வரும் இந்திய இளம் பெண் ஒருவர் பெரும் மதிப்புமிக்க கனேடிய உதவித்தொகையை வென்றுள்ளார்.

அபுதாபியில் இருக்கும் GEMS United Indian Schoolன் முன்னாள் மாணவியான காண்டேஸ் சாரா சிஜு என்பவர் தான் கனடாவில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் வழங்கும் ஒரு மில்லியன் திர்ஹாம் (இலங்கை மதிப்பில் ரூ. 9,81,60,192.22) மதிப்புள்ள உதவித்தொகையை வென்றுள்ளார்.

scholarship,university of toronto,millions,thank you ,
உதவித்தொகை, ரொறன்ரோ, பல்கலைக்கழகம், கோடிக்கணக்கு, நன்றி

கனேடிய உதவித்தொகையானது நான்கு வருட காலத்திற்கான கல்விக் கட்டணம், குடியிருப்பு செலவுகள், உணவு, புத்தகங்கள், காப்பீடு, தற்செயலான செலவுகள் மற்றும் பலவற்றை முழுமையாக உள்ளடக்கியதாகும்.

கோடிக்கணக்கான பணத்தை பெற்றுள்ள Candace Sara Ciju கூறுகையில், கனடாவில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் உதவித்தொகைக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Tags :