Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இ-பாஸ் நடைமுறை ரத்தாகுமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

இ-பாஸ் நடைமுறை ரத்தாகுமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

By: Nagaraj Sat, 22 Aug 2020 5:32:54 PM

இ-பாஸ் நடைமுறை ரத்தாகுமா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

இ-பாஸ் நடைமுறை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை இனி கூடாது என மத்திய உள்துறை செயலாளர் கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்லவும், பிறமாநிலங்கள் செல்லவும் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கிறது. அத்தியாவசிய காரணங்களுக்கு கூட இ-பாஸ் கிடைப்பதில்லை என்று பல்வேறு தரப்பினர் புகார் அளித்ததை அடுத்து, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கொடுக்கப்படும் என்று சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

chief minister,e-pass,procedure,announcer,minister ,முதல்வர், இ-பாஸ், நடைமுறை, அறிவிப்பார், அமைச்சர்

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இ-பாஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இனி இ-பாஸ் நடைமுறை கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

இரைதயடுத்து தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடருமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
|