Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலக்கரி சுரங்கம் அனுமதி ரத்து இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி .. அமைச்சர் உதயநிதி டிவிட்

நிலக்கரி சுரங்கம் அனுமதி ரத்து இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி .. அமைச்சர் உதயநிதி டிவிட்

By: vaithegi Sat, 08 Apr 2023 3:43:06 PM

நிலக்கரி சுரங்கம் அனுமதி ரத்து இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி   ..  அமைச்சர் உதயநிதி டிவிட்

சென்னை: தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது.

இதனை அடுத்து மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

udayanidhi,dwitt,coal mine ,உதயநிதி ,டிவிட்,நிலக்கரி சுரங்கம்

மேலும் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என்று முதலவர மு.க.ஸ்டாலின் உறுதி அளித்த நிலையில், மத்திய அரசு தற்போது இந்த திட்டத்தினை ரத்து செய்துள்ளது.இதனையடுத்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்

” காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது.இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. #விவசாயம்காப்போம்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
|