Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்து

தமிழகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்து

By: vaithegi Mon, 04 July 2022 6:43:04 PM

தமிழகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு  ரத்து

தமிழகம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (TNUSRB) கீழ் கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வில் BSF, CISF, ITBP மற்றும் SSB உள்ளிட்ட சில பிரிவுகளை சேர்ந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதன படி சுமார் 3,552 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட TNUSRBன் ஆட்சேர்ப்பில், முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கு (CAPF) அளிக்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

reservation,ex-serviceman ,இடஒதுக்கீடு  ,முன்னாள் ராணுவ வீரர்

இது பற்றி TNUSRB தலைவர் சீமா அகர்வால் அவர்கள் கூறுகையில், மாநில அரசின் உத்தரவுபடி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும் என CAPF வீரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தமிழக அரசின் இந்த அறிவிப்பானது காவல்துறையில் சேருவதற்காக ராணுவப் பணியை ராஜினாமா செய்து வரும் துணை ராணுவப் படையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவிர இதன் மூலம் நூற்றுக்கணக்கான முன்னாள் துணை ராணுவ வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்துக்கள் எழுந்திருக்கிறது.

Tags :