Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2020- 2021 ம் கல்வியாண்டில் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் பயம் தேவையில்லை

2020- 2021 ம் கல்வியாண்டில் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் பயம் தேவையில்லை

By: vaithegi Thu, 22 Dec 2022 6:32:25 PM

2020- 2021 ம் கல்வியாண்டில் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் பயம் தேவையில்லை

சென்னை: JEE தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் .... இந்தியாவின் மத்திய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு JEE எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

இந்த விண்ணப்ப நடைமுறையில்10ம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதாவது கடந்த 2020- 2021 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ‘ஆல் பாஸ்’ எனமட்டும் குறிப்பிடப்பட்டது.

jee exam,entrance exam , JEE தேர்வு,நுழைவுத்தேர்வு

ஏனெனில் அப்போது கொரோனா காரணத்தினால் மாணவர்களுக்கு தேர்வு நடத்த இயலவில்லை. அதனால் பாடவாரியாக மதிப்பெண்கள் அளிக்கப்படாமல் தேர்ச்சி என்பது மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். கடந்த 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு முடித்து JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க முயலும் போது 10ம் வகுப்பு மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் கேட்கப்படுகிறது.

இதனை அடுத்து இதனால் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து 2020- 2021 ம் கல்வியாண்டில் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :