உணவு வாங்கக்கூட வெளியில் செல்ல முடியலை... கர்நாடக மாநிலத்தவரின் வீடியோ
By: Nagaraj Tue, 10 Oct 2023 06:47:06 AM
இஸ்ரேல்: இஸ்ரேலில் சிக்கியுள்ள தங்களைக் காப்பாற்றக் கோரி கர்நாடக மாநிலத்தவர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் பொதுமக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலில் உணவுக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் சிக்கியுள்ள தங்களைக் காப்பாற்றக் கோரி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், போர்ச்சூழலில் சிக்கியுள்ள கன்னட மக்களைக் காப்பாற்ற கர்நாடக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்துவருவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
Tags :
people |
video |