Advertisement

பிரான்ஸ் பயணத்தை மறக்க முடியாது... பிரதமர் மோடி தகவல்

By: Nagaraj Sat, 15 July 2023 4:59:34 PM

பிரான்ஸ் பயணத்தை மறக்க முடியாது... பிரதமர் மோடி தகவல்

பிரான்ஸ்: பிரான்ஸ் பயணம் மறக்க முடியாதது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபரின் அழைப்பின் பேரில் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். தேசிய தின கொண்டாட்ட அணிவகுப்பில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

பிரான்ஸ் தேசிய தின விழா அணிவகுப்பில் இந்திய ராணுவ வீரர்களை பார்த்தது அற்புதம் என்று பிரதமர் மோடி கூறினார்.

attended,special guest,french national day,parade,wonderful,indian soldiers, ,பிரான்ஸ், தேசிய தினம், கொண்டாட்டம், சாகச நிகழ்ச்சி, விமானப்படை

மேலும் பிரான்ஸ் பயணம் குறித்து அவர் கூறுகையில், “பிரான்ஸ் பயணம் மறக்க முடியாதது. இந்திய வீரர்களின் அணிவகுப்பு கொண்டாட்டத்தை பார்த்தது பயணம் மேலும் சிறப்பாக இருந்தது. சிறப்பான விருந்தோம்பலுக்கு பிரான்ஸ் அதிபர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா-பிரான்ஸ் நட்பு இன்னும் தொடரட்டும்,” என கூறினார். முந்தைய தேசிய தின கொண்டாட்டத்தின் போது, இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானம் பிரெஞ்சு விமானங்களுடன் இணைந்து சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றது.

Tags :
|