Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திக்கலையாம்... எண்ணெய் உற்பத்தியை குறைத்ததுதான் காரணமாம்

சந்திக்கலையாம்... எண்ணெய் உற்பத்தியை குறைத்ததுதான் காரணமாம்

By: Nagaraj Sun, 13 Nov 2022 12:19:20 PM

சந்திக்கலையாம்... எண்ணெய் உற்பத்தியை குறைத்ததுதான் காரணமாம்

வாஷிங்டன்: G 20 கூட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரை சந்திக்காமல் தவிர்க்கிறார். சந்திக்கும் ஐடியா இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தோனேசியாவில் இன்று 13ம் தேதி தொடங்கவிருக்கும் G-20 கூட்டத்தின்போது சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் நேரடிச் சந்திப்பு நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்குத் திட்டமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

meeting,avoidance,washington,oil prices,president biden ,சந்திப்பு, தவிர்ப்பு, வாஷிங்டன், எண்ணெய் விலை, அதிபர் பைடன்

அதேவேளை இரு தலைவர்களும் இதற்குமுன் கடந்த ஜூலை மாதம் சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு சவுதி தலைமையிலான எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு உற்பத்தியைக் குறைத்துக்கொண்டது.

இந்த நடவடிக்கையினால் அமெரிக்காவில் எண்ணெய் விலையைக் குறைக்கவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அதிபர் பைடன் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பேரிடியாக அமைந்தது. இதனால்தான் சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :