Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கார் பந்தயம் பொழுதுபோக்கல்ல வீரத்தின் விளையாட்டு - கலக்கல் கள்ளக்குறிச்சி ராமு

கார் பந்தயம் பொழுதுபோக்கல்ல வீரத்தின் விளையாட்டு - கலக்கல் கள்ளக்குறிச்சி ராமு

By: Nagaraj Fri, 04 Sept 2020 3:25:17 PM

கார் பந்தயம் பொழுதுபோக்கல்ல வீரத்தின் விளையாட்டு - கலக்கல் கள்ளக்குறிச்சி ராமு

தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் விளக்குவது ஜல்லிக்கட்டு என்றால் மிகையில்லை. நம் ரத்தத்தில் ஊறிப்போன வீரத்தையும், பண்பாட்டு அடையாளத்தையும் ஜல்லிக்கட்டு வெளிப்படுத்துவது போலவே தற்போது மோட்டார் வாகன பந்தயங்களும் தமிழர்களின் திறன், அறிவாற்றலை வெளிப்படுத்தும் களமாக மாறி இருக்கிறது.

நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், ரஜினி கிருஷ்ணன், ஆதித்யா பட்டேல், மஹாவீர் ரகுநாதன், லீலா கிருஷ்ணன், நரேன் குமார், சரத்குமார் தமிழகம் தந்துள்ள பொக்கிஷங்கள் ஏராளம். இவர்களுக்கான உத்வேகத்தையும், முன்மாதிரியாகவும் வலம் வந்தவர்களில் கரிவர்தன், சுந்தரம், பி.ஐ.சந்தோக் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இந்தியாவில் முதல்தர மோட்டார் பந்தயங்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சென்னை அண்ணா நகரை சேர்ந்த யுனைடெட் மோட்டார்ஸ் சத்தியராமு என்பவரை நமக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் நடைபெறும் முதல்தர மோட்டார் பந்தயங்களில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான். இப்படி தங்களின் திறமையை பறைச்சாற்றி புகழ் கொடி நாட்டுகின்றனர். மோட்டார் வாகன பந்தயங்களுக்கு மிக தீவிரமான பயிற்சிகள் அவசியம்.

car racing,martial arts,india,international ,கார் பந்தயம், வீர விளையாட்டு, இந்தியா, சர்வதேசம்

அதற்கு சர்வதேச தரத்திலான ரேஸ் டிராக்குகள் தேவை. நம் வீரர்களின் திறமையை உலகமே கொண்டுகிறது. இந்த கார் பந்தயங்களை இந்தியாவில் நடத்த வேண்டும். அதற்கான வழிவகை, தேவையான ரேஸ் டிராக்குகள் அமைக்க அனைத்து வசதிகளும் நம் நாட்டிலேயே உள்ளது. கார்கள், பயிற்சி அளிக்க ஏதுவான சூழ்நிலை என நம் நாட்டில் ஏராளமான வசதிகள் உள்ளது.

அனைத்து விதத்திலும் நம் இந்தியாவை பிற நாடுகள் முன்னோடியாக பார்க்கின்றன. அந்த வகையில் உலகத்தரம் வாய்ந்த கார் பந்தயங்களை நம் நாட்டில் நடத்த அரசு முன் வரவேண்டும். கார்கள், அதன் உதிரிபாகங்கள், சர்வீஸ் என்று நம் இந்திய வல்லுனர்கள் திறன்பட இயங்குகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் கார் பந்தயங்கள் நடத்தப்பட்டால் மேலும், மேலும் பல வீரர்கள் உருவாகுவார்கள்.

திறமையும், செயல்பாடும் மிக்க இளைஞர்கள் பல்வேறு வெளிநாடுகளில் சென்று பயிற்சி எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தில் பந்தய கார்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் நிலை உள்ளது. அருமையான சர்வீஸ், உதிரி பாகங்கள், திறமையான மெக்கானிக்குகள், சர்வீஸ் பட்டறைகள் என்று அனைத்தும் இருக்கும் நிலையில் இந்தியாவில் கார் பந்தயங்களை அமைக்க வேண்டும் எனற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

கார் பந்தயத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிகள், பந்தயத்திற்கு உபயோகப்படும் கார்களின் வடிவமைப்பு என அனைத்தையும் செய்து தர தயாராக உள்ளோம். மிகவும் திறமைமிக்க இளைஞர்கள் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி உள்ளனர். இனி இந்த நிலை மாற வேண்டும். அதனால் நம் நாட்டில் உள்ள கார்கள் மட்டுமின்றி இறக்குமதி கார்களையும் பந்தயக்கார்கள் போல் மாற்றி அமைக்கலாம். எதிர்கால தலைமுறைகள் விரும்பும் வகையில் அனைத்து வசதிகளை செய்ய முடியும்.

எனவே இந்தியாவில் விரைவில் சர்வதேச அளவில் கார் ரேஸ்கள் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|