துருக்கியில் இருந்து வந்த சரக்கு கப்பல் கடத்தல்: ஈரான் ஆதரவு அமைப்பினர் செய்த செயல்
By: Nagaraj Tue, 21 Nov 2023 11:03:44 AM
துருக்கி: ஹவுதி அமைப்பினர் கடத்தல்... துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
52 ஊழியர்களுடன் கேலக்ஸி லீடர் என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல் செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாயமானதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம், இது உலக அளவில் மிகவும் தீவிரமான சம்பவம் என்றும், ஈரானிய பயங்கரவாதத்தின் மற்றொரு நிகழ்வு என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே இஸ்ரேலைச் சேர்ந்த ஆபிரஹாம் உங்கர் என்பவர் கப்பலின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட கேலக்ஸி லீடர் கப்பல், ஜப்பான் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்டுள்ளது.