Advertisement

தொடர் மழை காரணமாக கேரட் விலை அதிகரிப்பு

By: Monisha Mon, 05 Oct 2020 1:53:50 PM

தொடர் மழை காரணமாக கேரட் விலை அதிகரிப்பு

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் காய்கறிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. மேலும் சில வாரங்களுக்கு காய்கறிகளின் விலையில் ஏற்றம் இருக்கும். கடும் முகூர்த்த நாட்களில் கூட கேரட் விலை இதுவரை கிலோ ரூ.90-க்கு சென்றதே இல்லை. ஆனால் மலைகளில் தொடர் மழை காரணமாக விளைச்சல் குறைவு எதிரொலியால் தற்போது கேரட் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் நேற்றைய காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து மாட்டுத்தாவணி மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் பி.எஸ்.முருகன் கூறியதாவது:-

continuous rain,carrots,prices,market,traders ,தொடர் மழை,கேரட்,விலை,மார்க்கெட்,வியாபாரிகள்

தக்காளி கிலோ ரூ.20, வெண்டைக்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.25, அவரைக்காய் ரூ.50, பாகற்காய் சிறியது ரூ.100, பெரியது ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.20, நூக்கல் ரூ.30, முருங்கைக்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.35, சேனைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.40, கருவேப்பிலை ரூ.25, புதினா ரூ.15, மல்லி ரூ.50, கேரட் ரூ.60 முதல் ரூ. 90 வரை, பூசணி ரூ.15, பச்சை மிளகாய் ரூ.55 என விலை போனது.

முருங்கை பீன்ஸ் கிலோ ரூ.70, சோயா பீன்ஸ் ரூ.70, பட்டர் பீன்ஸ் ரூ.100-ஆக விற்கப்பட்டது. கடந்த வாரம் இந்த காய்கறிகளின் விலை தற்போதைய விலையில் இருந்து பாதியாக இருந்தது.

இதேபோல மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானது.

Tags :
|
|