Advertisement

கேரட் விலை தொடர்ந்து உச்சத்திலேயே நீடிக்கிறது

By: vaithegi Wed, 28 Sept 2022 11:32:59 AM

கேரட் விலை  தொடர்ந்து உச்சத்திலேயே நீடிக்கிறது


சென்னை: காய்கறி விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கேரட் விலை மட்டும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உச்சத்திலேயே நீடித்து கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ கேரட் ரக வாரியாக ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து இதுவே வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்வதை பார்க்க முடிகிறது. விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து கேரட் விலை அதிகரித்து இருப்பதாகவும், இன்னும் 15 நாட்களுக்கு இதே நிலைதான் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.

carrot,chennai ,கேரட் ,சென்னை

இதனை அடுத்து அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் மூட்டைகளில் வரக்கூடிய கேரட், தற்போது வெறும் 400 முதல் 500 மூட்டைகளில் மட்டுமே வருவதாக தெரிகிறது.

மேலும் கடந்த வாரத்தில் விலை அதிகரித்து காணப்பட்ட தக்காளி விலை தற்போது குறைந்து இருக்கிறது. தக்காளி, முருங்கைக்காய், அவரைக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்பட சிலவற்றின் விலையும் குறைந்து காணப்படுகிறது. மழை காலம் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு ஆண்டும் காய்கறி விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்கும்.

Tags :
|