Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரெயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

ரெயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

By: Monisha Wed, 11 Nov 2020 2:50:51 PM

ரெயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் செல்லும் பயணிகள், பட்டாசுக்களை கொண்டு செல்லக்கூடாது என, எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் 'தீபாவளி என்றால் கொண்டாட்டம்; பட்டாசு எடுத்து சென்றால் திண்டாட்டம்' போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கி, பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

train,firecrackers,prison,police,railway station ,ரெயில்,பட்டாசு,சிறை தண்டனை,போலீசார்,ரெயில் நிலையம்

அப்போது, "பயணிகள் யாரும் ரெயிலில் பட்டாசு எடுத்து செல்ல செல்லக்கூடாது என்றும், மீறி பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்" என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர்.

தீபாவளி பண்டிகைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட ரெயில்வே பாதுகாப்படை மற்றும் ரெயில்வே போலீசார் சார்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
|
|
|