Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்எல்சி நிறுவனத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய 3 ஆயிரம் பேர் மீது வழக்கு

என்எல்சி நிறுவனத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய 3 ஆயிரம் பேர் மீது வழக்கு

By: Nagaraj Sat, 29 July 2023 8:21:51 PM

என்எல்சி நிறுவனத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய 3 ஆயிரம் பேர் மீது வழக்கு

கடலூர்: என்எல்சி நிறுவனத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்நிறுவன நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

3 thousand,case,matter,nlc,person,record ,என்.எல்.சி, பதிவு, பேர், 3 ஆயிரம், வழக்கு, விவகாரம்

ஆர்ப்பாட்டம், அரசு அதிகாரி உத்தரவை மீறியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில், போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

Tags :
|
|
|
|