Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடிய மேற்கு வங்காள பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு

ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடிய மேற்கு வங்காள பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு

By: Karunakaran Tue, 23 June 2020 10:17:16 AM

ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடிய மேற்கு வங்காள பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் குறைவான எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்குவங்காள மாநிலத்தின் பஷ்சிம் மெடினிபூர் மாவட்டம் ஷோகாஇஸ்மாயில்பூர் கிராமத்தை சேர்ந்த பவன் ஜனா என்பவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 17ஆம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் கொன்றுள்ளனர் என பாஜக குற்றம்ச்சாட்டி வருகிறது.

west bengal,bjp,curfew,case,dilip ghosh ,மேற்கு வங்காளம்,பாஜக,திலீப் கோஷ்,வழக்குப்பதிவு

இந்நிலையில், உயிரிழந்த பவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் மற்றும் பாஜகவை சேர்ந்த 150 பேர் கடந்த 20 ஆம் தேதி சுபாஷ் நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் கூட்டமாக கூடினர். இந்த கூட்டத்திற்கு அவர்கள் மாநில போலீசாரிடம் அனுமதி பெறவில்லை.

ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் அனுமதி இன்றி கூட்டம் கூறியதற்காக பாஜக தலைவர் திலீப் கோஷ் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்களான ஜோதிர்மெ மஹொத், போஸ் ஆகியவர்கள் மீது மேற்குவங்காள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பவன் ஜனா கொலை குறித்து அம்மாநில போலீசார் கூறுகையில், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|