Advertisement

காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது

By: vaithegi Fri, 13 Oct 2023 10:01:35 AM

காவிரி மேலாண்மை ஆணையம்  இன்று கூடுகிறது

டெல்லி: காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழக அரசு. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியிலிருந்து வருகிற அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில் 3,000 கன அடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

cauvery management authority,delhi,government of karnataka ,காவிரி மேலாண்மை ஆணையம்,டெல்லி,கர்நாடக அரசு


எனினும் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம். விநாடிக்கு 16,000 கன அடி நீர் கேட்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

Tags :
|