Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடன் மோசடி வழக்கில் சாந்தா கோச்சார், தீபக் கோச்சர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

கடன் மோசடி வழக்கில் சாந்தா கோச்சார், தீபக் கோச்சர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

By: Nagaraj Mon, 26 Dec 2022 10:11:20 PM

கடன் மோசடி வழக்கில் சாந்தா கோச்சார், தீபக் கோச்சர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

புதுடில்லி: கடன் மோசடி வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், முன்னாள் நிர்வாக இயக்குநருமான சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சாந்தா கோச்சார். பதவியில் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடனாக வழங்கியுள்ளார்.

கடன் தொகை பல்வேறு தவணைகளில் சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தும் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் வீடியோகான் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடனை திரும்ப பெறாத கடனாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, 2018 மே மாதம் விசாரணை தொடங்கியது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் சாந்தா கோச்சார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

arrest,ceo of videocon,credit fraud , கடன் மோசடி, கைது, வீடியோகான் அதிபர்

3,250 கோடி கடன் மோசடி தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த கடன் மோசடி தொடர்பாக சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் தலைமை நிர்வாக அதிகாரி வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.


அவர்கள் மீது கிரிமினல் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, அமலாக்கத் துறை சாந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சாருக்கு சொந்தமான 78 கோடியை முடக்கி இருந்தது.

இதற்கிடையே கடன் மோசடி வழக்கில் ஐ.சி.ஐ. சி.ஐ. முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், முன்னாள் நிர்வாக இயக்குநருமான சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Tags :
|