Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • CBSE 2022 – 2023ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

CBSE 2022 – 2023ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

By: vaithegi Wed, 09 Nov 2022 7:15:33 PM

CBSE 2022 – 2023ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

இந்தியா: பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு .... இந்தியாவில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளி மாணவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் வைரஸ் வேகமாக பரவி வரும் இக்கட்டான சூழலில் மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

அதனால் மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு மதிப்பீடு முறையிலான மதிப்பெண்களை வழங்கியது. அதன் பிறகு பல கட்ட தடுப்பு பணிகளால் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் CBSE கல்வி வாரியம் நேரடி முறையில் பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டது.

public examination,cbse ,பொதுத்தேர்வு ,CBSE

அப்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை செமஸ்டர் முறை போல 2 கட்டங்களாக நடத்தியது. மேலும் தேர்வில் மாணவர்களின் பாட சுமையை குறைக்கும் வகையில் 50% பாடங்களில் இருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டது.

இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பழைய முறைப்படி வரும் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கப்படும் எனர் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தேர்வின் மாதிரி வினாத்தாள் மற்றும் மதிப்பெண் கணக்கீடு முறை வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு https://www.cbse.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Tags :