Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • CBSE கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

CBSE கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

By: vaithegi Wed, 15 June 2022 3:12:57 PM

CBSE கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா: கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தி வந்தது. இதற்கு முன்பு, 2020ம் ஆண்டு 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்வதாக CBSE வாரியம் அறிவித்திருந்தது.

இதை தொடர்ந்து மாற்று மதிப்பீட்டின் சூத்திரத்தை தேர்ந்தெடுத்த கல்வி வாரியம் தேர்வுகள் எதுவும் இன்றி அனைத்து வகுப்பு மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தியது.

இதற்கிடையில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2021-22ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 2 பருவங்களாக நடத்தியது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் முதல் பருவத் தேர்வும், ஏப்ரல் மாதத்தில் 2ம் பருவத்தேர்வும் நடத்தப்பட்டது.

general examination results,cbse,online ,பொதுத் தேர்வு முடிவுகள்,CBSE ,ஆன்லைன்

இதில் 2ம் பருவத் தேர்வு மே 24 அன்று முடிந்தது. இத்தேர்வுக்கான முடிவு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் எதுவும் வெளியாகாத நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக மிகவும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ வாரியத்தின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மாணவர்கள் அனைவரும் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in மற்றும் cbseresults.nic.in மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முன்னதாக CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த ஜூன் 5ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|