CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – ஜூலை கடைசி வாரத்தில் வெளியீடு
By: vaithegi Fri, 08 July 2022 8:30:39 PM
தமிழகம்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முன்பு, கடந்த கல்வியாண்டில் கொரோனா பரவல் பாதிப்புகள் காரணமாக CBSE மாணவர்களுக்கு 2 பகுதிகளாக பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது.
அதன்படி முதல் டெர்ம் தேர்வானது கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2வது டெர்ம் தேர்வானது இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டிருந்தது.
இப்போது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று CBSE மாணவர்கள் காத்திருக்கும் வேளையில் ஜூலை மாதத்தில் முடிவுகள் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை கடைசி வாரத்தில் வெளியிடுவதற்கு வாரியம் திட்டமிட்டுள்ளதாக CBSE PRO ராம சர்மா தகவல் அளித்துள்ளார். இருப்பினும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் உறுதியான தேதிகள் எதுவும் வெளியிடப்படவில்லை.